Home / Photos
சூப்பர் டூப்பர் ஹிட்டான 'கருப்பு'.. படக்குழுவினருக்கு விலையுர்ந்த கிப்ட் கொடுத்த சூர்யா.. வேற லெவல்! போட்டோஸ்!
By Chandru
சூர்யா நடிப்பில் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து படக்குழுவினருக்கு விலையுர்ந்த கிப்ட் கொடுத்து சப்ரைஸ் செய்துள்ளார். யார்யாருக்கு? என்ன கிப்ட்? வாங்க பார்ப்போம்.
1/5
Photo Credit: filmibeat
Share
சூர்யா நடிப்பில் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. உலகளவில் 310 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா, 'கருப்பு' படக்குழுவினருக்கு சப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
2/5
Photo Credit: X@Chrissuccess
Share
தொடர் தோல்வியால் தனது சினிமா கேரியரில் சரிவை சந்தித்து வந்த சூர்யா, 'கருப்பு' படத்தின் மூலம் வேற லெவல் கம்பேக் கொடுத்துள்ளார். எதிர்பார்ப்பை விட இப்படம் அதிக வசூல் மற்றும் லாபத்தை கொடுத்துள்ளதால் அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
3/5
Photo Credit: X@Chrissuccess
Share
கருப்பு பட இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு மஹேந்திர நிறுவனத்தின் BE6 பேட்மேன் எடிசன் காரை பரிசளித்துள்ளார்.
4/5
Photo Credit: X@Chrissuccess
Share
ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு மகேந்திரா நிறுவனத்தின் BE6 பேட்மேன் எடிசன் காரை பரிசளித்து கருப்பு பட வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
5/5
Photo Credit: X@Chrissuccess
Share
மேலும் இதுவரை திரையுலகில் யாரும் செய்த ஒரு விஷயத்தை சூர்யா செய்துள்ளார். ஆதாவது கருப்பு பட எடிட்டருக்கு கார் பரிசளித்துள்ளார். படத்தொகுப்பாளர் ஆர் கலைவாணனுக்கு மகேந்திரா நிறுவனத்தின் BE6 பேட்மேன் எடிசன் காரை கிப்ட் செய்துள்ளார். சூர்யா கிப்ட் கொடுத்த BE6 பேட்மேன் எடிசன் காரின் விலை ரூ.30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழில்நுட்பக்கலைஞருக்கு கிப்ட் கொடுத்த சூர்யா, இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு என்ன கிப்ட் கொடுக்கப்போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications