மாஸ் கம் பேக் கொடுத்த சூர்யா.. 18 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தடை அதை உடை: பல தடைகளை கடந்து சாதனை படைத்தது வரும் திரைப்படம் 'கருப்பு'. பணம் செட்டில்மென்ட் பஞ்சாயத்தால் மே 14ம் தேதி கருப்பு திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகாமல் போனது. இதனால் எப்போதும் கலகலவென இருக்கும் ஆர்ஜே பாலாஜி மனமுடைந்து தேம்பி தேம்பி கண்ணீர்விட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அப்புறம் பஞ்சாயத்து தீர்த்து படம் அடுத்த நாள் மே 15ம் தேதி ரிலீசானது.
ஸ்டார் இயக்குநர்: தனது படத்தை தானே இயக்கி, நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி முதன் முறையாக ஸ்டார் நடிகரை இயக்கிய 'கருப்பு' படத்தை உருவாக்கினார். சூர்யா நடிக்க உடன் திரிஷா, மன்சூர் அலிகான், நட்டி நட்ராஜன், தீபா சங்கர், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
யோகி பாபு காணோம்: மேலும் இப்படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளதாகவும். அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மே 15இல் கோலாகலமாக ரிலீசானது. முதல் நாள் முதல் ஷோவில் இருந்தே தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
தோல்வி: தொடர் தோல்வியை சந்தித்து வந்த சூர்யா இப்படத்தில் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அதன்படி படம் முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். படத்தின் மீதான விமர்சனம் கொஞ்சம் முன்னுக்கு பின்னாக இருந்தாலும் வசூலில் குறையில்லை.
கம் பேக்: பட ரிலீசாகும் முன் பலரும் கருப்பு படம் தான் சூர்யாவின் கடைசி படமாக இருக்கும் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக 'கருப்பு' மாறியுள்ளது.
வசூல் வேட்டை: அதன்படி இப்படம் தியேட்டரில் ரிலீசாகி 18 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் இதுவரை சுமார் 310 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபத்தை கொடுத்து மாபெரும் வெற்றி படமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications