3 நாட்களில் வசூல் வேட்டை நடத்திய சூர்யாவின் 'கருப்பு'.. கலெக்ஷன் என்ன?
சூர்யா நடிப்பில் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் கடந்த 3 நாட்களில் செய்த வசூல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சூர்யா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. வாரிசு நடிகரான இவர் தனது கடின உழைப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பல ஹிட் படங்கள் கொடுத்த வந்த சூர்யாவின் சமீபத்திய படங்கள் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்று வந்தது. என்ன காரணமோ தெரியல தொடர் தோல்வியை சந்தித்து வந்தார். அதேபோல் இவர் கமிட்டான சில படங்களும் கைவிட்டு நழுவியது.
சொதப்பல்: தொடர் சரிவில் இருந்த சூர்யா திடீரென நடிகர் ஆர்ஜே பாலாஜியுடன் கூட்டணி வைக்கப்போவதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவா? என்னப்பா இது? என ரசிகர்கள் அலுத்துக்கொண்டனர். இந்த நிலையில் சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' திரைப்படம் உருவானது.
படக்குழு: சூர்யாவுடன் திரிஷா, ஜோர்ஜ் மரியான், யோகி பாபு, நட்டி நட்ராஜன், அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஏமாற்றம்: பெரும் எதிர்பார்ப்புடன் உருவான கருப்பு கடந்த மே 14ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் அன்று ரிலீசாகவில்லை. இதனால் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மனவேதனையுடன் அழுதபடி வீடியோ வெளியிட்டது பெரும் பேசுபொருளானது. சிலரால் படம் ரிலீசாவதால் தாமதம் ஏற்படுவதாக கூறியிருந்தார். பின்னர் ஒருவழியாக படம் தடையை மீறி கடந்த மே 15ம் தேதி ரசிகர்களின் ஆரவாரத்துடன் ரிலீசானது.
கதை சுருக்கம்: நீதிக்காக நீதிமன்றம் செல்லும் சாமானிய மக்களுக்கு நீதிமறுக்கப்படும்போது, தாமதிக்கப்படும்போது கடவுளே நீதிபதியாக வந்து நீதி கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மைய கரு.
சூப்பர் ஹிட்: எதிர்பார்ப்புடன் வெளிவந்த கருப்பு திரைப்படம் முதல் நாள் முதல் ஷோவில் இருந்தே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கிய நிலையில் வார இறுதி நாட்களில் மக்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்தனர்.
பட்ஜெட்? வசூல்? அதன்படி கடந்த 3 நாட்களில் கருப்பு திரைப்படம் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யா அதிரடி கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் படத்தின் பட்ஜெட் 130-140 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் வரும் வாரங்களில் இதே வரவேற்பு இருந்தால் படம் 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications