சூர்யா முதல் லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன் வரை.. 'சீன்' பட நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் 'சீன்' படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, ஆனந்த்ராஜ், லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான திரைப்படம் 'சீன்'. நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2' படத்துடன் போட்டிப்போட்டு ரிலீஸானது. தியேட்டரில் ரிலீஸான 'சீன்' விமர்சனத்திலும், வசூலிலும் வெற்றிநடைப்போட்டி வருகிறது. அந்தவகையில் கடந்த 4 நாட்களில் மட்டும் இப்படம், 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து சினிமா ரசிகர்களை ஈர்த்து வரும் சீன் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. வாங்க பார்ப்போம்.
சோசியல் மீடியாக்களில் காமெடி ரீல்ஸ் வெளியிட்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் லுங்கி பாய்ஸ் ராஜ் பிரியன். தற்போது இவர், 'சீன்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து தனது சினிமா கேரியரை தொடங்கியுள்ளார். இவருக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள நடிகர் லாலுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜ் நடித்துள்ளார். அந்த ரோலில் நடிக்க அவருக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகர் நஸ்லன், சீன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கு சுமார் 1 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹிட் படங்கள் கொடுத்த மலையாள இயக்குநர் ஜித்து மாதவன், சீன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை நஸ்ரியா, தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதியாக, படத்தின் நாயகன் சூர்யாவுக்கு சம்பளமாக 15 கோடி ரூபாயும், லாபத்தில் பங்கும் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. சீன் பட தயாரிப்பாளர் சூர்யா-ஜோதிகா ஜோடி தான். மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications