OTT: த்ரிஷ்யம் படத்திற்கு இணையான.. ஓடிடியில் உள்ள சஸ்பென்ஸ், திரில்லர் மலையாள படங்கள்.. வீக் எண்டு லிஸ்ட்!
சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திரில்லர் படம் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் மலையாள படம் த்ரில் திரைக்கதைகளுக்கு பெயர்போனது. அந்த வகையில் இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய த்ரிஷ்யம் படத்திற்கு இணையான சஸ்பென்ஸ், திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2021இல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Seetharaam Benoy Case Number Eighteen'. கிராமத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும் போலீஸ்கரர் அங்கு விதவிதமான கொலை, கொள்ளையர்களை எதிர்கொள்கிறார். திருட்டு, சீரியல் கில்லர் இவற்றை சுற்றி படம் நகரும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2022ல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Twenty One Grams'. மர்ம கொலை அதனை சுற்றி நடக்கும் த்ரில் விசாரணை பற்றிய கதைக்களம். த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
நயன்தாரா நடிப்பில் 2022இல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Nizhal'. கொலை சம்மந்தமான கதைகளை அதிகம் கேட்க விரும்பும் சிறுவன். அப்படியாக அவன் கேட்கும் கதை ஒன்று நிஜத்தில் நடக்க படம் சுவாரசியம் நிறைந்ததாக மாறுகிறது. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் காணலாம்.
2022இல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Kooman'. தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் பணி செய்யும் காவலர் எதிர்கொள்ளும் த்ரில் சம்பவங்களே இப்படத்தின் சுவாரசிய கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
2007இல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Detective'. தற்கொலை செய்து இறந்ததாக கூறப்படும் முக்கிய நபர், கொலை செய்யப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்கின் விசாரணையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications