Home / Photos
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.. பிற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு கொண்டாடி மகிழ்ந்த வீரர்கள்!
By Chandru
டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1/16
Photo Credit: PTI
Share
டி20 உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.
2/16
Photo Credit: PTI
Share
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
3/16
Photo Credit: PTI
Share
சஞ்சு சாம்சனை தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் நியூசிலாந்து அணி பௌலர்களை கதறவிட்டனர்.
4/16
Photo Credit: PTI
Share
இவர்களை தொடர்ந்து களமிறங்குய இஷான் கிஷனும் 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி வீரர்களின் அதிரடி பேட்டிங்கை கண்டு நியூசிலாந்து அணி பௌலர்கள் மனம் நொந்துபோயினர்.
5/16
Photo Credit: PTI
Share
சிக்ஸர் மழைகளால் வாணவேடிக்கை காட்டிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 256 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
6/16
Photo Credit: PTI
Share
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிம் சீஃபர்ட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான தொடக்கமாக இருந்தும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் நியூசிலாந்து அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது.
7/16
Photo Credit: PTI
Share
இறுதியாக, 19 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதன்படி 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது.
8/16
Photo Credit: PTI
Share
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3வது முறையாக டி20 சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
9/16
Photo Credit: PTI
Share
இந்திய அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications