Home / Photos
தெத்து பல்லு சிரிப்பில்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் கிகி விஜய்!
By Divya Bala
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வருபவர்களில் ஒருவரான கிகி விஜய், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன
1/5
Photo Credit: Instagram
Share
தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களின் முக்கியத்துவத்தை நிரூபித்தவர்களில் கிகி விஜய் ஒருவர். எந்த சூழலிலும் சிரிப்புடன் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் பல நடன மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். “ஜூனியர் சூப்பர் ஸ்டார்” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மேலும் பிரபலமானார்.
3/5
Photo Credit: Instagram
Share
நடிகர் சாந்தனு பாக்கியராஜ் அவர்களை காதலித்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். அவரின் மாமனார் இயக்குநர் பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4/5
Photo Credit: Instagram
Share
நடனத்தில் திறமை பெற்ற கிகி, கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். “மானாட மயிலாட” மூலம் தனது பயணத்தை தொடங்கி பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக திகழ்ந்தார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது “கிகி டான்ஸ் ஸ்டுடியோ” நடத்தி வருவதுடன், ஆடியோ லாஞ்ச் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சிகப்பு நிற பட்டு புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.


Click it and Unblock the Notifications