Home / Photos
நீர்.. நெருப்பு.. நிலம்.. காற்று.. நீங்க எந்த ராசி.. உங்க குணம் இப்படித்தானாம்.. செக் பண்ணுங்க
In Vedic astrology 12 zodiac signs are divided into four types namely water, fire, air and earth. With these we can know the characteristics of people born in those zodiac signs.
1/7
Share
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதியங்கள் அதிகம் உள்ளவர்கள்
2/7
Share
காற்று ராசியில் பிறந்தவர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள்.
3/7
Share
மேஷம்,சிம்மம்,தனுசு ஆகிய மூன்று ராசிகளும் நெருப்பு ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியில் பிறந்தவர்கள் தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள். தலைமை தாங்குபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
4/7
Share
ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய மூன்று ராசிகளும் நில ராசிகள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். அன்பு நிறைந்த மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவார்கள்.
5/7
Share
மிதுனம்,துலாம்,கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காற்று ராசிகள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.
6/7
Share
மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப்படும். இவை தவிர நீர், நெருப்பு, காற்று, நிலம் என்று நான்கு வகையாக ராசிகளை பிரித்துள்ளனர். இவற்றை வைத்து அந்த ராசிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்.
7/7
Share
கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளும் நீர் ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.


Click it and Unblock the Notifications