bredcrumb

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..

By Chandru
| Published: Tuesday, November 22, 2022, 18:17 [IST]
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்
PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
1/11
D. இமான் : 2002 ஆம் ஆண்டு 'காதலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான்.ஆனால் இவரின் முதல் படம் வெளிவரவில்லை.பின்னர் விஜய் நடித்த  'தமிழன்'என்ற படத்தின் மூலம் மக்களால் அறியப்பட்டார்.பின் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இமான் திகழ்கிறார்.

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
2/11
தேவா : தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா.இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக ஜொலித்து வருகிறார்.'மண்ணுக்கேத்த மகாராசா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
3/11
விஜய் ஆண்டனி : சின்னத்திரையில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி 'சுக்கிரன்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த விஜய் தற்போது ஹீரோவாக நடிக்கவும், படங்களுக்கு தயாரிப்பதிலும் பிரபலமாக வருகிறார்.

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
4/11
சந்தோஷ் நாராயணன் : 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்.இப்படத்தினை தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II, வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவர் ஒரு தெலுங்கு படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
5/11
G.V. பிரகாஷ் : இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் பரத்,  பசுபதி, பாவனா, சிரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'வெயில்'.இப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் G.V. பிரகாஷ்.தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.இவர் இசையில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம் பல விருதுகளை வென்றது. 

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
6/11
யுவன் ஷங்கர் ராஜா : இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா.1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' என்ற படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இவரின் முதல் படம் வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் பாடல்கள் கணிசமான அளவில் பிரபலமானது.அதைத்தொடர்ந்து பல படங்களில் இசையமைத்த யுவன் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.பல இளைஞர்களின் பிலே லிஸ்டில் இவரின் பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்.

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
7/11
ஜிப்ரான் : இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2011ல் வெளியான 'வாகை சூடவா' திரைப்படத்தில் இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான்.தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
8/11
A.R. ரஹ்மான் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி இசை ஜாம்பவானாக வலம் வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.தமிழில் 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இசை உலகில் இசைஞானி இளையராஜா ஆட்சிசெய்த தமிழ் சினிமாவை ரஹ்மான் தன்பக்கம் திருப்பிக்கொண்டார்.கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இசையால் அடிமைப்படுத்தினர்.உலகின் உயர்ந்த சினிமா விருதான ஆஸ்கார் விருதை தட்டித் தூக்கினார்.தற்போது இவர் இசையமைத்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது.

PHOTOS : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் அறிமுகமான முதல் படம்.. லிஸ்ட் இதோ..
9/11
அனிருத் : இயக்குனர் ஐஸ்வர்யா ரஜின்னிகந்த இயக்கத்தில் நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் '3'.இப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.இவர் இசையமைத்த 'why this kolaveri' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது.தற்போது தமிழ் சினிமாவின் இசையை ஆட்டிப்படைத்து வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X