சீமான் வீட்டுக்கு சென்ற முதல்வர் விஜய்.. ஆரத்தழுவி உள்ளே அழைத்து சென்ற சீமான்.. போட்டோஸ்!
தமிழ்நாடு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ மற்றும் சீமானை அடுத்தடுத்து சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்வர் விஜய் வருவதை அறிந்து வீட்டு வாசலில் காத்திருந்து, முதல்வர் வந்த பின்னர் மிகுந்த அன்புடன் கட்டியணைத்து வீட்டிக்குள் அழைத்து சென்றார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிக்கு சென்ற முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார்.
பிரச்சாரத்தின் போது திமுகவை தீயசக்தி என விமர்சித்த முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதல்வர் விஜய்யும், ஸ்டாலினும் மாறி மாறி சால்வை போர்த்தி மரியாதை செலுத்திக்கொண்டனர்.
இன்று காலை சட்டசபை சென்று எம்எல்ஏ பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Click it and Unblock the Notifications