இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்துள்ள சீரியல் நடிகைகள்.. யாருக்கு மவுசு அதிகம்? டாப் லிஸ்ட்!
வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு மக்களிடையே அதிக மவுசு உண்டு. நாள்தோறும் டிவியில் தோன்றி இல்லத்தரசிகளின் மனத்தில் நீங்க இடம் பிடித்துள்ளனர். அதிலும் சிலருக்கு ஸ்டார் நடிகர்களை காட்டிலும் அதிக ஃபேன்ஸ் கூட்டமும் உண்டு. அந்த வகையில் ஸ்டார் நடிகைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்துள்ள சீரியல் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
'செம்பருத்தி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷபானா ஷாஜஹான். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் சுமார் 1.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை 'ரோஷினி ஹரிபிரியன்'. திரைப்படங்களில் வலம் வரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
விஜய் டிவியின் பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தவர் ரித்திகா தமிழ்செல்வி. தொடர்ந்து வெவ்வேறு சீரியல்களில் வலம் வந்த ரித்திகா, விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ இவரை மேலும் பிரபலப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 1.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சீரியல், பிக் பாஸ் என மக்கள் மனதில் இடம் பிடித்த ரச்சிதா, தற்போது வெள்ளித்திரையில் களம் கண்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
மௌன ராகம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. அதேபோல் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது நடனம் திறமையை வெளிகாட்டியவர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
ராஜா ராணி சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். தற்போது சன் டிவி சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு, இன்ஸ்டாகிராமில் சுமார் 4.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
சரவணன் மீனாட்சி சீரியலில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் 'மைனா நந்தினி'. தற்போது இவர், வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 7.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். சின்னத்திரை நடிகைகளில் அதிக ஃபாலோவர்ஸ் இவருக்கு தான்.


Click it and Unblock the Notifications