அதிக சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள தமிழ் யூடியூபர்களின்.. ஒரு மாத யூடியூப் வருமானம் எவ்வளவு இருக்கும்? கணிப்பு!
அதிக சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள தமிழ் யூடியூபர்கள், தமிழ் யூடியூபர்கள், யூடியூப் சேனல், யூடியூப், தமிழ் யூடியூபர்களின் சம்பளம், யூடியூப் பிரபலங்கள்,
மக்களிடையே மிகவும் பிரபலமாக வலம் வரும் குக்கிங் சேனல் 'மெட்ராஸ் சமையல்'. இளம் பெண்கள், பேச்சுலர்ஸ் உட்பட பலரின் சமையல் டீச்சராக இருந்துள்ளார் என்றே சொல்லலாம். 6.43 மில்லியன் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள இவர், யூடியூப் மூலமாகவும், ப்ரோமோஷன் மூலமாகவும் மாதம் 4-12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
பலரின் ஃபேவரைட் யூடியூப் சேனலாக இருப்பது 'பரிதாபங்கள்'. கோபி, சுதாகரின் அசத்தலான காமெடி அனைவரையும் ஈர்த்து வருகிறது. 6.58 மில்லியன் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள இவர்களுக்கு, யூடியூப் மூலமாகவும், ப்ரோமோஷன் மூலமாகவும் மாதம் 5-15 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
யூடியூபில் பிரபலமாக இருந்து வரும் குக்கிங் சேனல் டாடி ஆறுமுகத்தின் 'Village Food Factory' சேனல் ஆகும். 4.74 மில்லியன் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள இவருக்கு, யூடியூப் மூலமாகவும், ப்ரோமோஷன் மூலமாகவும் மாதம் 6-18 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
யூடியூப் மூலம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் இர்பான். ஹோட்டல் ஹோட்டலாக சென்று ஃபுட் ரிவியூ செய்து வீடியோ பதிவிட்டு மக்களை கவர்ந்த இர்பானுக்கு யூடியூபில் சுமார் 4.81 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இவருக்கு யூடியூப் மூலமாகவும், ப்ரோமோஷன் மூலமாகவும் மாதம் 7-20 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
யூடியூப் மூலம் அசுர வளர்ச்சி கண்ட மற்றொரு நபர் மதன் கௌரி. 8.58 மில்லியன் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள இவருக்கு, யூடியூப் மூலமாகவும், ப்ரோமோஷன் மூலமாகவும் மாதம் 6-18 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
காமெடி வீடியோக்கள் மூலம் இளைஞர்களின் மனதை வென்றவர் 'மைக்செட்' ஸ்ரீராம். 8.43 மில்லியன் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள இவருக்கு, யூடியூப் மூலமாகவும், ப்ரோமோஷன் மூலமாகவும் மாதம் 8-20 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் யூடியூபர்களில் அதிக வருமானம் ஈட்டி வரும் சேனலாக Village Cooking Channel உள்ளது. விதவிதமான குக்கிங் வீடியோக்கள் மூலம் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றனர். 30.3 மில்லியன் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் வைத்துள்ள இவர்களுக்கு யூடியூப் மூலமாக மாதம் 15-40 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications