ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள்.. யாரெல்லாம்? போட்டோஸ்!
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கோவையை சேர்ந்த வித்யா ராமராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
கடலூரை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், தனிநபர் 100 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் 100 மீட்டர் ஏர் ரைபிள்- டீம் ஆகிய இரு போட்டியிலும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் கிராமத்தை சேர்ந்த பரணிகா இளங்கோவன், கோல் ஊன்றித் தாண்டுதல் விளையாட்டு போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
சென்னையை சேர்ந்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
சென்னை ஜோலார்பேட்டையை சேர்ந்த விஷால் T.K., கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் வெள்ளி பதக்கமும், ஆண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், ஆண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.



Click it and Unblock the Notifications