Home / Photos
கொட்டும் மழையில் ஆட்டம் போடும் விஜய் சீரியல் நடிகை.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
பிக்பாஸ் தெலுங்கு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியங்கா ஜெயின். இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/7
Share
விஜய் டிவியின் பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் வெகு விரைவில் பிரபலம் அடைந்துவிடுகின்றனர். பலர் சீரியல்களின் மூலமாகவே பிரபலமாகி சினிமாவில் நுழைந்ததும் உண்டு. இப்படி சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
2/7
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் ஹீரோவாக நடித்தார். அந்த தொடரில் ஹீரோயினாக பிரியங்கா ஜெயின் நடித்தார். சீரியலில் அவருக்கு கிராமத்து பெண் வேடம் என்றாலும், உண்மையில் அவர் படு மாடர்ன்.
3/7
Share
இதில் சஞ்சீவுக்கு ஜோடியாக, வாய் பேசாத கண்மணியாக நடித்தார் பிரியங்கா ஜெயின். அமெரிக்க ரிட்டர்னான சஞ்சீவ், கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகி பிரியங்கா இருவருக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பானது.
4/7
Share
இதில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் அருமையாக நடித்தார் நடிகை பிரியங்கா. எதிலும் ராசி இல்லாதவள் என அப்பா, தம்பி, பாட்டி என யாருக்கும் இவரைப் பிடிக்காது. அம்மாவின் ஆதரவோடு பிரச்னைகளை எதிர்க்கொண்டு கண்மணி மீது சஞ்சீவுக்கு காதல்.
5/7
Share
ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.
6/7
Share
பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு காற்றின் மொழி தொடர் மூலம் தான் அறிமுகம் ஆகி பலரது பிடித்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா, வளர்ந்தது, படித்தது பெங்களூரில் தான்.
7/7
Share
பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். இவர் சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.


Click it and Unblock the Notifications