Home / Photos
PHOTOS: சக போட்டியாளர்களை அலறவிடும்.. பிக் பாஸ் மாயாவின் குடும்பத்தை பாத்துருக்கீங்களா? மொத்தம் மூணு சிஸ்டர்ஸ் இருக்காங்களாம்!
By Chandru
bigg boss fame maya family photos goes trending on social media. let's check out the latest photos here.
1/9
Share
பிக் பாஸ் போட்டியாளர் மாயா தனது தாய், தந்தை மற்றும் சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/9
Photo Credit: instagram
Share
கடந்த 2015 ஆம் ஆண்டு 'வானவில் வாழ்க்கை' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாயா. இயக்குநர் ஜேம்ஸ் வசந்த் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் ஷார்ட் ஹேர் கட்டில் சிங்கர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
3/9
Photo Credit: instagram
Share
அப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், யெண்டா தலையில எண்ணெய் வெக்கல, ரஜினியின் 2.0 உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார்.
4/9
Photo Credit: instagram
Share
தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவை அனைத்தும் சிறு கதாபாத்திரங்களே, இதனால் மாயாவினால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. இந்த நிலையில் மாயாவுக்கு பெரிய படத்தில் நடிக்க சூப்பர் வாய்ப்பு கிடைத்து. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
5/9
Photo Credit: instagram
Share
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் மாயாவுக்கு முக்கிய கதாபாத்திரம் என்றாலும் சில நிமிடங்கள் மட்டுமே நடித்து மிகவும் பிரபலமாகிவிட்டார். அப்படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் ஈர்த்துவிட்டார் மாயா.
6/9
Photo Credit: instagram
Share
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாயா மீண்டும் லோகேஷ் இயக்கிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் விக்ரமின் துருவ நட்சத்திரம், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் மாயா நடித்திருள்ளார், இருப்பினும் இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.
7/9
Photo Credit: instagram
Share
வெள்ளைத்திரையில் கலக்கி வரும் மாயா, விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக என்ட்ரி கொடுத்துள்ளார். விக்ரம் படத்திற்கு பின் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 மூலம் பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பிரபமாகி வருகிறார் மாயா.
8/9
Share
பிக் பாஸ் முதல் வாரம் ஆரம்பித்து தற்போது வரை தனது அடாவடியான விளையாட்டால் ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களையும் கிறங்கடித்து வருகிறார். அதேபோல் பிக் பாஸ் சீசன் 7 மிகவும் சுவாரசியமாக விறுவிறுப்பாக பார்வையாளர்களை ஈர்த்து வருவதற்கு முக்கிய காரணம் மாயா என்றே சொல்லலாம்.
9/9
Share
அடாவடியான ஆட்டத்துடன் தற்போது பிக் பாஸ் வீட்டில் தந்திரமாக விளையாடி வரும் மாயா தனது தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது மாயாவின் குடும்ப புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications