Home / Photos
வசூல் சாதனையில் 'தாய் கிழவி'.. 25 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
By Chandru
ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த தாய் கிழவி திரைப்படத்தின் 25 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: filmibeat
Share
ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'தாய் கிழவி'. இவரின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.
2/7
Photo Credit: filmibeat
Share
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா, முனீஷ்காந்த், சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தியேட்டரில் 'தாய் கிழவி' திரைப்படம் ரிலீசானது.
3/7
Photo Credit: filmibeat
Share
எதிர்பார்ப்புடன் ரிலீஸான இப்படம், முதல் நாளில் இருந்து அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது. தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் வர வர தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.
4/7
Photo Credit: filmibeat
Share
காமெடி, செண்டிமெண்ட், எமோஷன் என அணைத்து ஜானரிலும் புகுந்து கலக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன். மேலும் ராதிகாவின் அசாத்திய நடிப்பு வேற லெவல். கட்சிதமாக பொருந்திய மேக்அப், ராதிகாவா இது என்று கேட்கவைத்தது.
5/7
Photo Credit: filmibeat
Share
சினிமா ரசிகர்களால் ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்ட இந்த ஃபீல் குட் திரைப்படம் வெறும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கம்மியான பட்ஜெட்டில் வெளிவந்து மாஸ் காட்டி வருகிறது தாய் கிழவி.
6/7
Photo Credit: filmibeat
Share
தியேட்டரில் ரிலீசாகி குறுகிய காலத்தில் பட்ஜெட் வசூலை கடந்து லாபம் ஈட்டிய தாய் கிழவி, மூன்று வாரங்களை கடந்தும் தியேட்டரில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
7/7
Photo Credit: filmibeat
Share
அந்த வகையில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் 25 நாட்களில் சுமார் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications