குடும்பங்கள் கொண்டாடும் 'தாய் கிழவி' படத்தின்.. 3 நாள் வசூல் என்ன? கலெக்ஷன்!
ராதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'தாய் கிழவி' 3 நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நடிப்பு ராட்சசி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை ராதிகா. 80,90களில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வந்த இவர், தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்படி இவர், முதன்மையான முதுமையான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தாய் கிழவி'.
படக்குழு: ராதிகா, அருள்தாஸ், பாலசரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், ரேச்சல் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தாய் கிழவி'. சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
கதைக்களம்: மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி தான் பவுனுதாயி (ராதிகா). ஊரே பயப்படும் கம்பிரமான மூதாட்டியாக உள்ளார். டிவி பார்த்துக்கொண்டிருந்த பவுனுதாயிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இப்போ போகுமோ அப்போ போகுமோ என்ற நிலைக்கு சென்று விடுகிறார்.
பவுனுதாயி பெற்ற 3 ஆண் பிள்ளைகள் சொத்து பிரச்சனையால் தங்களது குடும்பத்துடன் வேறு ஊரில் வசித்து வருகின்றனர். மகள் பவுனுதாயி உடன் உள்ளார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் பவுனுதாயியை பார்க்க வரும் அவர்களுக்கு ஒரு ரகசியம் தெரியவருகிறது. பவுனுதாயிடம் சுமார் 160 சவரன் தங்க நகை இருப்பதா ரகசியம் வெளிவருகிறது. அது இருக்கும் இடம் பவுனுதாயிக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரை பழைய நிலைக்கு கொண்ட வர மகன்களால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். லட்சங்கள் செலவு செய்து அம்மாவை காப்பாற்றினார்களா? இல்லையா? அந்த 160 சவரன் நகை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
பவுனுதாயி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவின் நடிப்பு வேற லெவல். மூதாட்டி மேக்அப்புக்கு பின் ராதிகாவா இது என்று கண்டுபிடிப்பதே கஷ்டம் என்று சொல்லலாம். சீனுக்கு சீன் சிரிக்கவைக்கும் காமெடி, இறுதிவரை பயணிக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த பெண்ணியம் பேசும் இப்படம் செம ஹிட்.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியுள்ளார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். அருள்தாஸ், பாலசரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பும் வேற லெவல்.
வசூல்: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 27ம் தேதி ரிலீஸான இப்படம் மூன்று நாட்களில் சுமார் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வரும் வாரங்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரித்து குறைந்த பட்ஜெட்டில் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications