வசூல் வேட்டையில் 'தாய் கிழவி' திரைப்படம்.. படத்தின் பட்ஜெட், கலெக்ஷன் என்ன? ஓடிடியிலும் வரப்போகுதாம்?
நடிகை ராதிகா நடிப்பில் வெளிவந்த 'தாய் கிழவி' இதுவரை செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மற்றும் படத்தின் பட்ஜெட் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மேலும் இப்படம் விரைவில் ஓடிடி தளத்திலும் ரிலீசாகவுள்ளதாம். அது எந்த ஓடிடி தளம் என்பதையும் பார்ப்போம்.
படக்குழு: அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 27ம் தேதி வெளிவந்த திரைப்படம் 'தாய் கிழவி'. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
மெனக்கெடல்: வயதான தோற்றத்தில் ராதிகா நடித்துள்ளார். அந்த தோற்றத்தை கொண்டு வர படக்குழுவினர் பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். வழக்கம் போல் இந்த படத்திலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரளவைத்துள்ளார், ராதிகா.
கதை: ராதிகா தான் இப்படத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளைக்கு தாய் பவுனுத்தாயி. குடிகார புருஷனை சமாளித்து தனி ஒரு ஆளாக கஷ்டப்பட்டு பிள்ளையை ஆளாகிவிடுகிறார்.
பவுனுத்தாயியின் கணவர் இறந்துவிட சொத்தில் பங்கு கேட்டு பிள்ளைகள் பிரச்னை செய்ய அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறார். பெண் பிள்ளையோ வரதட்சணை கொடுமையால் கணவனை விட்டு பிரிந்து தனது மகனுடன் பவுனுத்தாயின் அறைவனைப்பில் வாழ்ந்து வருகிறார்.
தங்கம்: ஒரு நாள் திடீரென பவுனுத்தாயிக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு படுத்தப்படுக்கையாகிவிடுகிறார். சொத்துக்காக பிரிந்து சென்ற மகன்கள் படுத்தப்படுக்கையாக இருக்கும் அம்மாவை பார்க்க வருகின்றனர். அம்மாவுக்கு இறுதி மரியாதையை செய்துவிட்டு சென்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் மூவரும் குடும்பத்துடன் பவுனுத்தாயியை பார்க்க வருகின்றனர். அப்போது போறபோக்கில் ஒரு நபர் பவுனுத்தாயிடம் 160 சவரன் தங்கம் இருப்பதாக சொல்கிறார்.
விறுவிறுப்பு: அந்த 160 சவரன் தங்கம் எங்கே உள்ளது? பவுனுத்தாயிக்கு மட்டும் தான் தங்கம் இருக்கும் இடம் தெரியும் என்பதால் பவுனுத்தாயின் உயிரை காப்பாற்ற மகன்கள் போராடுகின்றனர். தங்கம் கிடைத்ததா? பவுனுத்தாயி பிழைத்தாரா? என்ன ஆனது என்பதே படத்தின் மீது சுவாரசியமான கதைக்களம்.
வசூல்? ஓடிடி? தியேட்டரில் ரிலீஸான தாய் கிழவி முதல் நாளில் இருந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. காமெடி, சஸ்பென்ஸ், எமோஷன் என பார்வையாளர்களை அறிமுக படத்திலேயே ஈர்த்துவிட்டார் இயக்குநர். 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 20 நாட்களில் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம். மேலும் தற்போது தியேட்டரில் வெற்றி நடைபோடும் 'தாய் கிழவி' படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications