நேரடியாக ஓடிடியில் ரிலீசாகவுள்ள.. பிரியங்கா சோப்ராவின் ஆக்ஷன், அட்வென்ச்சர் படம்.. என்ன? எதில் பார்க்கலாம்?
பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள 'The Bluff' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. படத்தின் கதை என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை பார்ப்போம்.
ஹாலிவுட் நடிகை: பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. திடீரென ஹிந்தி படங்களுக்கு பாய் சொல்லிவிட்டு ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அதன்படி தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.
படக்குழு: ஃபிராங்க் ஈ. ஃப்ளவேர்ஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தான் 'The Bluff'. கார்ல் அர்பன், ஜாக் மோரிஸ் உட்பட பல முன்னைய ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளார்.
கதை? 1800களில் அமெரிக்க கரீபியன் தீவுகளில் நிகழும் த்ரில் கதை. கடற்கொள்ளையர்கள் படையின் தலைவியாக உள்ளார் பிரியங்கா சோப்ரா. இவரின் படையை கண்டாலே அனைவரும் தெறித்து ஓடுவர். மிகவும் மோசமான கடற்கொள்ளையர் படையாகும். இப்படியான கொடுரமான படைக்கு தலைவியாக இருந்த பிரியங்கா, அதனை துறந்து அமைதியான வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார்.
கடல்கொள்ளையார் தொழிலை மறந்து புது வாழ்க்கையை குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் ப்ரியங்காவை துயரம் தேடி வருகிறது. பழைய பகையை தீர்த்துக்கொள்ளவும், புதையலை தேடியும் கப்பல் கேப்டன் பிரியங்காவை தேடி வருகிறான்.
பழசை மறந்து சாதுவாக இருக்கும் ப்ரியங்கா, தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றவுடன் மீண்டும் கடற்கொள்ளை தலைவியாக மாறி எதிரிகளை துவம்சம் செய்கிறார். இறுதியில் ப்ரியங்காவுக்கு என்ன ஆச்சு? ப்ரியங்கா குடும்பம் தப்பித்ததா? புதையல் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
எந்த ஓடிடி? அதிரடி ஆக்ஷன், அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், நாளை 25ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. ப்ரியங்காவின் ஆக்ஷன் காட்சிகளை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications