Home / Photos
உலகின் முதல் பறக்கும் கார்.. இனி போக்குவரத்து நெரிசலை எளிதில் கடந்துவிடலாம்..!!
அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. கலிபோர்னியாவில் பொது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மாடல் ஜீரோ முன்மாதிரி பறப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம்.
1/7
Photo Credit: Alef Aeronautics
Share
மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பறக்கும் கார்கள் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.
2/7
Photo Credit: Alef Aeronautics
Share
பணக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களுக்கு மலிவு விலையில் ஒரு வாகனத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் (Alef Aeronautics) நிறுவப்பட்டது. பின்னர் அக்டோபர் 2022 இல், பறக்கும் கார்களுக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் விண்ணப்பித்து அதற்கான ஒப்புதலையும் பெற்றது. உலகில் பறக்கும் கார்களுக்கான முதல் ஒப்புதல் இதுவாகும்.
3/7
Photo Credit: Alef Aeronautics
Share
சமீபத்தில் ஒரு பறக்கும் கார் மற்றொரு வாகனத்தின் மீது செங்குத்தாக பறக்க வைத்து சோதனை செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. இந்த சோதனை விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.
4/7
Photo Credit: Alef Aeronautics
Share
நெருக்கடி மிகுந்த நகர்ப்புற கட்டமைப்புக்குள் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாடல் A ஆனது வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) திறன்களைக் கொண்டதாகும். இந்த காரின் விலை $300,000 (ரூ. 2,59,94,775) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் Model Z என அழைக்கப்படும் இரண்டாவது பறக்கும் காரின் விலை சுமார் $35,000 என எதிர்பார்க்கப்படுகிறது.
5/7
Photo Credit: Alef Aeronautics
Share
தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பல தரப்பினரும் இந்த காரை வாங்க ஆர்டர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் அதன் மாடல் ஏ வாகனத்திற்கு, நிறுவனம் ஏற்கனவே 3,300 க்கும் மேற்பட்ட முன்கூட்டிய ஆர்டர்களை பெற்றுள்ளது.
6/7
Photo Credit: Alef Aeronautics
Share
மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த காரில் இரண்டு பேர் வரை பயணம் செய்ய முடியும். இந்த கார் தரைவழியாக 320 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறனையும், சுமார் 160 கிலோமீட்டர் தூரம் பறக்கும் திறனையும் கொண்டது.
7/7
Photo Credit: Alef Aeronautics
Share
ஆனால், இந்த கார் குறைந்த வேகத்தில் செல்லக்கூடியது. சாதாரண சாலைகளில் மணிக்கு 25 மைல்களுக்கு மேல் செல்லாது என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கார் செங்குத்து நிலையில் நின்றபடி அப்படியே நேராக மேலே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது செயலாற்றிற்கு வந்தால் போக்குவரத்து முறையில் மிகப்பெரும் புரட்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications