இந்த வார தியேட்டர் ரிலீஸ்.. வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன?
ஒவ்வொரு வாரமும் விடுமுறையையொட்டி விதவிதமான புது படங்கள் தியேட்டரில் ரிலீசாகி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நடிகர் சவுந்தரராஜா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சாயாவனம்'. மலையாள இயக்குநர் அனில் இயக்கத்தில் தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், தேவானந்தா ஷாஜிலால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மழைக்காட்டில் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பதே இப்படத்தின் திரில்லர் கதைக்களம். சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற இப்படம், இன்று19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
சண்முக பாண்டியன், சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொம்புசீவி'. பொன்ராம் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
மோகன்லால், திலீப், சாண்டி மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Bha Bha Ba'. ஆக்ஷன், காமெடி, திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், நேற்று18ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Avatar: Fire and Ash'. அவதார் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. முதல் இரண்டு பாகமும் உலகளவில் ரிலீஸாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications