இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தாய் கிழவி'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம், இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் ஆரி அர்ஜுன், தீப்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃபோர்த் ப்ளோர்'. ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் உருவான இப்படம், இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆழி'. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சிவாங்கோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏ படம்'. அம்பேத்கரின் வாழ்கை வரலாற்றை சொல்லும் படமாகும். இப்படம், இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
காமெடி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Masthishka Maranam'. இப்படம், இன்று 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படம் 'Scream'. இப்படத்தின் ஏழாவது பாகமாக உருவாகியுள்ள 'Scream 7' திரைப்படம் இன்று 27ம் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications