Home / Photos
இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட்!
By Chandru
வார இறுதி நாட்கள் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம், விதவிதமான புது திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீசாகி வருவது. அந்த வகையில் இந்த வீக் எண்டு சினிமா ரசிகர்களை என்டர்டைன் செய்ய வரும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: IMDB
Share
பேய் கதை: சென்னை சேர்ந்த நண்பர்கள் குழு, கிரிக்கெட் விளையாட ஒரு மைதானத்தை தேடி அழைக்கின்றனர். அப்போது ஆராய்ச்சி நிலையத்தில் மாட்டிக்கொள்ளும் அந்த நண்பர்கள் குழு, தீய சக்தியை எதிர்கொள்ளகின்றனர். பின்னர் அவர்களுக்கு என்ன ஆனது என்பதே படத்தின் திகில் கதைக்களம்.,
2/8
Photo Credit: IMDB
Share
ஓடும் குதிரை சாடும் குதிரை: அல்தாப் சலீம் இயக்கத்தில் பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்த திரைப்படம் 'ஓடும் குதிரை சாடும் குதிரை'. இந்த மலையாள படம் இன்று ரிலீசாகிறது.
3/8
Photo Credit: ticketnow
Share
வீரவணக்கம்: கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய தலைவர்களில் ஒருவர் தான் பி. கிருஷ்ணபிள்ளை. இவரின் வாழ்க்கை கதையே 'வீரவணக்கம்' படத்தின் கதைக்களம். சமுத்திரக்கனி, பி. கிருஷ்ணபிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: youtube
Share
சொட்ட சொட்ட நனையுது: பிக் பாஸ் வர்ஷினி, நிஷாந்த், ஷாலினி, ரோபோ சங்கர், புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சொட்ட சொட்ட நனையுது'. முடி கொட்டுவதால் தலையில் ஏற்படும் வழுக்கை, அதனால் இளைஞர்கள் எத்ரிக்கொள்ளும் பிரச்சனைகளை மையம்கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.
5/8
Photo Credit: IMDB
Share
கிப்ட்: இயக்குநர் பாண்டியன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிப்ட்'. இவருடன் பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, கிரேன் மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலியல் வாழ்கை விசாரிக்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் சோனியா நடித்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் ரிலீசாகிறது.
6/8
Photo Credit: IMDB
Share
குற்றம் புதிது: அறிமுக இயக்குனர் ரஜித் இயக்கத்தில் நடிகர் தருண் நடிப்பில் உருவாகியுள்ள திராய்ப்படம் 'குற்றம் புதிது'. மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று தியேயட்டரில் ரிலீசாகவுள்ளது.
7/8
Photo Credit: IMDB
Share
கடுக்கா: இயக்குநர் எஸ்எஸ் முருகரசு இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அசத்தலான கமர்ஷியல் திரைப்படம் தான் 'கடுக்கா'. இப்படம் இன்று ரிலீசாகவுள்ளது.
8/8
Photo Credit: IMDB
Share
நறுவீ: மலைவாழ் மக்களின் நலன்களை பற்றி பேசும் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'நறுவீ'. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications