OTT: வியூஸ் வேட்டையில் 'கருப்பு'.. அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ள டாப் 10 லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் வேட்டை நடத்திய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Second Case of Seetharam'. கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளின் த்ரில் கதை. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த இப்படம், அமேசான் பிரைம் ஓடிடியில் 10ம் இடத்தை பிடித்துள்ளது.
சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் தெலுங்கில் Veerabhadrudu என்ற பெயரில் ரிலீசானது. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், அமேசான் பிரைம் தளத்திலும் ரிலீசாகி ஓடிடி பிரியர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 9ம் இடத்தை பிடித்துள்ளது.
கெளதம் மேனன், சமுத்திரக்கனி, அபிநயா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'கார்மேனி செல்வம்'. டாப் 10 பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ள இப்படம், இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மிருணாள் தாகூர் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'Dacoit: A Love Story'. தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலியை பழிவாங்க துடிக்கும் காதலனின் கதை. டாப் 10 பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ள இப்படம், இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அமேசான் தளத்தில் அதிக வியூஸ் வேட்டை நடத்தி வரும் ஹாலிவுட் திரைப்படம் 'The Sheep Detectives'. ஆடுகளும், ஆடு மேய்க்கும் நபருக்கும் இடையேயான கதை. அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து வரும் இப்படம், டாப் 10 பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
அமேசான் தளத்தில் செம வைரலாக வலம் வரும் ரொமான்டிக் திரைப்படம் 'Your Fault: London'. டாப் 10 பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ள இப்படத்தை, இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹிந்தியில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Ginny Wedss Sunny 2'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வரும் இப்படம், இந்த டாப் 10 பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
தெலுங்கில் வெளிவந்த மிஸ்ட்ரி, ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Mareechika'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வரும் இப்படம், இந்த டாப் 10 பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
தியேட்டரில் ஹிட்டானதை தொடர்ந்து அமேசான் பிரைம் தளத்தில் வெற்றிநடைபோட்டு வரும் லேட்டஸ்ட் திரைப்படம் 'கருப்பு'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து இந்த டாப் 10 பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications