Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் பார்க்கவேண்டிய படம், வெப் சீரிஸ் என்னென்ன? லிஸ்ட்!
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சைக்கலாஜிக்கல் திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'Mercy'. எதிர்கால உலகம் எப்படி ருக்கும் என்பதை காட்டும் இப்படம், வரும் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கலக்கலான காமெடி கதைக்களத்தில் வெளிவந்த வெப் தொடர் 'Jury Duty Presents: Company Retreat'. முழுக்க முழுக்க ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட இத்தொடரின் இரண்டாவது சீசன் நாளை 20ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2023ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் காமெடி க்ரைம் மிஸ்ட்ரி வெப் தொடர் 'Deadloch'. இத்தொடரின் இரண்டாவது சீசன் இன்று 19ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள பியோகிராஃபி திரைப்படம் 'Magellan'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
சைக்கலாஜிக்கல் ட்ராமா, காமெடி, சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'By Design'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ரொமான்டிக் கதைக்களத்தில் உருவான அராபிக் திரைப்படம் 'All That's Left of You'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications