OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன், திரில்லர் வெப் தொடர் 'காட்டான்'. பெரும் எதிர்பார்ப்புடன் இத்தொடர் நாளை 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஃபேண்டஸி, சைக்கலாஜிக்கல் திரில்லர், ஆக்ஷன், க்ரைம் வெப் தொடர் 'Daredevil: Born Again'. முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இரண்டாவது சீசன் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'மாயபிம்பம்'. இப்படம் நாளை 27ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் வெளிவந்த பெங்காலி திரைப்படம் 'Projapati 2'. இப்படம் நாளை 27ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
நடிகர் ஆதி நடிப்பில் வெளிவந்த ஹாரர், திரில்லர் திரைப்படம் 'சப்தம்'. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications