NETFLIX OTT: ரொமான்ஸ் முதல் திரில்லர் வரை.. இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த டாக்குமெண்டரி காமெடி திரைப்படம் 'André Is an Idiot'. இப்படம் நேற்று 17ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'I Will Find You'. இத்தொடர் இன்று 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் காணலாம்.
ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளிவந்த சைனீஸ் திரைப்படம் 'Per Aspera Ad Astra'. இப்படம் இன்று 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
ஃபீல் குட் ரொமான்டிக், காமெடி திரைப்படம் 'Voicemails for Isabelle'. இப்படம் நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் காணலாம்.
ஆக்ஷன், காமெடி, க்ரைம் ஜானரில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் 'Husbands in Action'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் காணலாம்.
மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'Oasis'. கோடீஸ்வரர்கள் வெகேஷன் செல்லும் இடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் த்ரில் சம்பவங்கள் பற்றிய கதை. இத்தொடரின் முதல் சீசன் நாளை 19ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் காணலாம்.
செயற்கை நுண்ணறிவு, சயின்ஸ் பிக்ஷன், அட்வென்ச்சர் ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'The Creator'. 2023இல் வெளிவந்த இப்படம், வரும் ஜூன் 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications