Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய லேட்டஸ்ட் திரைப்படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'In the Hand of Dante'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'பிளாஸ்ட்'. இப்படம், இன்று 25ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
மாபெரும் வசூல் சாதனை செய்த இயக்குநர் ராஜமௌலியின் 'பாகுபலி' படத்தின் மேக்கிங் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Baahubali The Torchbearer'. இப்படம் நாளை 26ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
முன்னாள் பிரபல WWE வீரர் ஜான் சீனா நடிப்பில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Little Brother'. அசத்தலான காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம் நாளை 26ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
திரில்லர் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் 'Notes from the Last Row'. இத்தொடர் நாளை 26ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
ஆக்ஷன், க்ரைம், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கொரியன் வெப் தொடர் 'Agent Kim Reactivated'. இத்தொடர் நாளை 26ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
2022இல் ஹிந்தியில் வெளிவந்த ரியாலிட்டி ஷோ வெப் தொடர் 'Lock Upp'. இத்தொடரின் இரண்டாவது சீசன் வரும் 27ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications