Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. மளமளவென குவிந்த திரைப்படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ரொமான்டிக்கான கொரியன் திரைப்படம் 'Even If This Love Disappears Tonight'. இப்படம் கடந்த 3ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.
காமெடியான டாக்குமெண்டரி வெப் தொடர் 'Mo Gilligan : In the Moment'. இத்தொடர் கடந்த 4ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது.
உண்மையான க்ரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி திரைப்படம் 'The Investigation of Lucy Letby'. இப்படம் நேற்று 4ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசானது.
ஆக்ஷன், ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Death Whisperer 3'. இப்படம் நேற்று 4ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது.
ஆக்ஷன், கிரைம் டிராமா வெப் தொடர் 'Unfamiliar'. இந்த திரில்லர் தொடர் இன்று 5ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது.
திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி கோர்ட் டிராமா வெப் தொடர் 'The Lincoln Lawyer'. இத்தொடர் இன்று 5ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது.
உலக பிரபலமான செஸ் வீரர்கனை ஜூடிட் போல்கர் பற்றிய பயோகிராபி திரைப்படம் 'Queen of Chess'. இப்படம் நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. ஹிந்தி மொழியிலும் ரிலீஸாகவுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் 'Transformers One'. இப்படம் நாளை 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக Is It Cake? Valentines என்ற ரியாலிட்டி ஷோ நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது.


Click it and Unblock the Notifications