Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கலக்கலான காமெடி ரியாலிட்டி ஷோ கொரியன் வெப் தொடர் 'Ready or Not: Texas'. இத்தொடரின் முதல் சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், காமெடி கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Anaconda'. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர் கதைக்களத்தில் வெளிவந்த மினி வெப் தொடர் 'Something Very Bad Is Going to Happen'. இந்த திரில்லர் வெப் தொடர் இன்று 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
க்ரைம், சஸ்பென்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Red Line'. இப்படம் இன்று 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ரஜிஷா விஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த காமெடி, சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Masthishka Maranam'. இப்படம் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ராணி முகர்ஜி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Mardaani 3'. மர்மமான முறையில் காணாமல் போகும் குழந்தைகளை புலன் விசாரணை செய்து கண்டுபிடிக்கும் பெண் போலீஸ் அதிகாரியின் கதை. இப்படம் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
உலக பிரபலமான கொரியன் BTS இசை குழுவினர் தங்களது ராணுவ சேவையை முடித்து மீண்டும் இசை பயணத்தை தொடங்கியதை பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'BTS: The Return'. இப்படம் நாளை 27ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications