Netflix OTT: இந்த வார நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய படங்கள், வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வார வீக் எண்டை அலங்கரிக்க நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டாக்குமெண்டரி, பயோகிராஃபி ஃபீல் குட் ஜப்பானிஸ் திரைப்படம் 'This is I'. இப்படம் கடந்த 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
கார் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தாலி மினி வெப் தொடர் 'Motorvalley'. இத்தொடர் கடந்த 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி ஃபேமிலி டிராமா திரைப்படம் 'Anaganaga Oka Raju'. இப்படம் நேற்று 11ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது. தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Kohrra'. இத்தொடரின் முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் நேற்று 11ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.
ஜீவா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் இன்று 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
கலக்கலான காமெடி கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Tyler Perry's Joe's College Road Trip'. இப்படம் நாளை 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
சஸ்பென்ஸ் திரில்லர் டிராமா கதைக்களத்தில் உருவான வெப் தொடர் 'Lead Children'. இத்தொடர் நாளை 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
ரொமான்டிக் டிராமா துருக்கி வெப் தொடர் 'Museum of Innocence'. இத்தொடர் நாளை 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த கொரியன் வெப் தொடர் 'The Art of Sarah'. இந்த திரில்லர் தொடர் நாளை 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications