OTT: 2026 புத்தாண்டு கொண்டாட்டமாக.. ஓடிடியில் ரிலீஸாகும் தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
2025க்கு பாய் பாய் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது மக்களே.. 2026 புத்தாண்டை வரவேற்க உலக மக்கள் தயாராகிவிட்டனர். அந்த வகையில் 2026 புத்தாண்டை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கும்கி 2'. விக்ரம் பிரபு நடித்த முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகமாக கும்கி 2 ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் 2026 ஜனவரி மாதம் 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Eko'. சுவாரசியம், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இந்த புலனாய்வு திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'இத்திரி நேரம்' (Ithiri Neram). பிரிந்து சென்ற காதலர்கள் மீண்டும் ஒருவரையொருவர் பார்க்கும்போது என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் அழகான கதைக்களம். இப்படம் இன்று 31ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் டிராமா வெப் தொடர் 'எல் பி டபிள்யூ'. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான விக்ராந்த், தனது மாணவர்களை எப்படி ஊக்குவிக்கிறார் என்பதே இத்தொடரின் கதை. இத்தொடர் நாளை 1ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Mowgli'. வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து காது கேளாத, வாய் பேச முடியாத தனது காதலியைக் காப்பாற்ற பழங்குடியின இளைஞன் நடத்தும் போராட்டமே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நாளை 1ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் டிராமா திரைப்படம் 'பியூட்டி'. இப்படம் வரும் ஜனவரி 2ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications