OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் வெளிவந்த கலக்கலான காமெடி திரைப்படம் 'Lechindi Mahila Lokam'. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசானது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் ரிலீஸாகியுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் 'Alpha: Men Love Vengeance'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
மறக்கமுடியாத அட்வென்ச்சர் நிறைந்த சாலை பயணத்தின் ஃபீல் குட் வெப் தொடர் 'சோல் டிரிப்'. இத்தொடர் இன்று ETvWin ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த காமெடி ரொமான்டிக் திரைப்படம் 'ஹாப்பி ராஜ்'. இப்படம் நாளை 24ம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில் செல்லா, சுதர்ஷன் கோவிந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'நீ ஃபாரெவர்'. இப்படம் நாளை 24ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ஃபீல் குட் ரொமான்டிக் திரைப்படம் 'Band Melam'. இப்படம் நாளை 24ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Prathichaya'. இப்படம் நாளை 24ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம் திரைப்படம் 'JC the University'. இப்படம் நாளை 24ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications