OTT Release: திரில்லர் முதல் ரொமான்டிக் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை வாங்க பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த மிஸ்ட்ரி, ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'Peter'. சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படம், வரும் ஜூன் 5ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன் ட்ராமா திரைப்படம் 'The Rise of Ashoka'. இப்படம், வரும் ஜூன் 5ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'KD: The Devil'. சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் வெளிவந்த இப்படம், வரும் ஜூன் 5ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழியிலும் ரிலீசாகவுள்ளது.
மம்மூட்டி நடிப்பில் ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Patriot'. விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டான இப்படம், வரும் ஜூன் 5ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியிலும் ரிலீசாகவுள்ளது.
விது, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் '29'. இப்படம், வரும் ஜூன் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழியிலும் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications