OTT Release: அதிரடி பிளாஸ்ட் முதல் ரொமான்ஸ் வரை.. இந்த வார தென்னிந்திய ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகளவில் மாபெரும் வரவேற்பு பெற்ற இயக்குநர் ராஜமௌலியின் 'பாகுபலி' படத்தின் மேக்கிங் பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Baahubali The TorchBearer'. இப்படம் நாளை 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'பிளாஸ்ட்'. விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டான இப்படம், இன்று 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Dear Kerala Kutty'. அவினாஷ், மமிதா பைஜு, சாந்தி கிருஷ்ணா, அக்ஷய் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம், இன்று 25ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீசானது.
2024இல் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா மலையாள திரைப்படம் 'Cup'. இப்படம் இன்று 25ம் தேதி மனோரமா மேக்ஸ் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, பொஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம், மிஸ்ட்ரி, கேங்ஸ்டர் வெப் தொடர் 'லிங்கம்'. இத்தொடர் நாளை 26ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
புதுமுகங்கள் பலர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி ஃபீல் குட் வெப் தொடர் 'மம்மட்டியான் ஸ்டார்ஸ்'. கிரிக்கெட் மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்க போராடும் இளைஞர்கள் பற்றிய கதை. இத்தொடர் நாளை 26ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள ஹாரர், மிஸ்ட்ரி வெப் தொடர் 'Muthassi'. இத்தொடரின் முதல் சீசன் நாளை 26ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
விதார்த், ஜான் விஜய், கலையரசன், அதுல்யா சந்திரா, தேஜு அஸ்வினி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'மூன்றாம் கண்'. தொழிற்சாலையில் ஜெனரல் மேனேஜராக இருப்பவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுகிறார். அதை நான் தான் செய்தேன் என நான்கு பேர் முன்வருகின்றனர். யார் கொலை செய்தது என்பதே படத்தின் த்ரில் கதை. இப்படம் நாளை 26ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
இயக்குநர் கிரண் நாராயணன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'Revolver Rinko'. சிறுவர்களை சுற்றி நடக்கும் சுவாரசிய கதைக்களம். இப்படம் நாளை 26ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications