Home / Photos
OTT Release: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
By Chandru
இந்த வாரம் தென்னிந்திய ஓடிடி ரசிகர்களுக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் புது படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளன. அந்த வகையில் ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: sony liv
Share
க்ரைம், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மலையாள வெப் தொடர் 'Eyes'. இத்தொடர் நாளை 9ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
2/6
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ், மோகன்லால், மாளவிகா ஷர்மா ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Khalifa'. தங்க கடத்தல் அதனை சுற்றி நடக்கும் த்ரில் கதைக்களம். இப்படம் நாளை 9ம் தேதி அமேசான் பிரைம், சிம்பிளி சவுத், LionsGatePlay, மனோரமா மேக்ஸ், ஆஹா வீடியோ ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ளது.
3/6
Photo Credit: IMDB
Share
மலையாளத்தில் வெளிவந்த தரமான க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Pradhama Drishtiya Kuttakkar'. தியேட்டரில் மாபெரும் ஹிட்டான இப்படம், நாளை 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ளது.
4/6
Photo Credit: instagram
Share
தெலுங்கில் வெளிவந்த காமெடி ட்ராமா வெப் தொடர் 'Least Eligible Bachelor'. கலகலப்பான சம்பவங்கள் நிறைந்த இத்தொடர் கடந்த வாரம் ETvWin ஓடிடி தளத்தில் ரிலீஸான நிலையில் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. நாளை 9ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
5/6
Photo Credit: IMDB
Share
குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக், திரில்லர் திரைப்படம் 'பாரிஸ் கஃபே'. இப்படம் நாளை 9ம் தேதி அமேசான் பிரைம், சிம்பிளி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
6/6
Photo Credit: IMDB
Share
சூரி நடிப்பில் வெளிவந்த மாபெரும் ஹிட் திரைப்படம் 'மண்டாடி'. இப்படம் இன்று 8ம் தேதி ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.



Click it and Unblock the Notifications