Home / Photos
OTT Release: பெத்லகேம் குடும்ப யூனிட் முதல் லவ் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தென்னிந்திய திரைப்படங்கள்!
By Chandru
ஒவ்வொரு வாரமும் புது புது படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி ஓடிடி பிரியர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? எதை எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த காமெடி ரொமான்டிக் திரைப்படம் 'Romanchakam'. ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் காதல் செய்து வந்த ஜோடியின் ரொமான்டிக் கலந்த காமெடி கதை. இப்படம் இன்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2/6
Photo Credit: zee5
Share
மலையாள மக்களின் கால்பந்து ஆர்வத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள வெப் தொடர் 'Panthadikkaam'. இத்தொடர் இன்று 1ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
3/6
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'. உலகளவில் மாபெரும் வரவேற்பு பெற்று 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. இப்படம் நாளை ஆக்டொபர் 2ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
4/6
Photo Credit: IMDB
Share
ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி ஃபீல் குட் வெப் தொடர் '#Love'. டேட்டிங் ஆப் நிறுவனத்தை உருவாகும் ஐஸ்வர்யா லக்ஷ்மி, அர்ஜுன் தாஸ் இடையே நடக்கும் காதல், மோதல் பற்றிய கதை. இத்தொடர் நாளை ஆக்டொபர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
5/6
Photo Credit: IMDB
Share
கன்னடத்தில் வெளிவந்த காமெடி, க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Mother Promise'. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த இளைஞனின் கதை. இப்படம் நாளை ஆக்டொபர் 2ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
6/6
Photo Credit: Etvwin
Share
தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி ட்ராமா வெப் தொடர் 'Least Eligible Bachelor'. ஐடி அலுவலகத்தில் நடக்கும் கலகலப்பான சம்பவங்களே இத்தொடரின் காமெடி கதைக்களம். இத்தொடர் நேற்று 30ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications