OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? எதை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த திரைப்படம் 'Neeli Hakki'. 10 வயது கிராமத்து சிறுவன் நகர வாழ்கை எப்படி பார்க்கிறான் என்பதே இப்படத்தின் அழகான கதைக்களம். திரைப்பட விழாவில் விருது வென்ற இப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர் வெப் தொடர் 'D/O Prasad Rao: Kanabadutaledu'. மர்மமான முறையில் காணாமல் மகளை தேடும் அப்பாவின் பாசப்போராட்டம். த்ரில் கதைக்களம் நிறைந்த இத்தொடர் நாளை 27ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Honey'. நவீனகால தீண்டாமை என்று சொல்லப்படும் மாந்திரீகத்தால் ஒரு சிறுமிக்கு ஏற்படும் அநீதி பற்றிய த்ரில் கதைக்களம். இப்படம் நாளை 27ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் வெளியாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் வெப் தொடர் 'Secret Stories: Roslin'. நடிகை மீனா, அனிஷிமா அனில்குமார், சஞ்சனா தீபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இத்தொடர் நாளை 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. மலையாள மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சமுத்திரக்கனி, மூணார் ரமேஷ், ராஜ் திரன்தாசு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'தடயம்'. இத்தொடர் நாளை 27ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'Sri Chidambaram Garu'. இந்த ஃபீல் குட் திரைப்படம் இன்று 26ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications