ஒரே நாளில் தியேட்டரில் ரிலீஸாகும் 10 படங்கள்.. என்னென்ன? எந்த படத்திற்கு போகலாம்?
இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு எந்த படத்திற்கு போகலாம்? வாங்க பார்ப்போம்.
பிரகாஷ் வீர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் கன்னடத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'The Devil'. இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வா வாத்தியார்'. எம்ஜிஆரின் தீவிர ரசிகர் தனது பேரனையும் எம்ஜிஆர் ரசிகனாகவே வளர்க்கிறார். அதன்பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் திரையிடப்படவில்லை.
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் 'அகாண்டா 2'. மகளுக்கு வரும் ஆபத்துகளை எப்படி தடுக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'மகாசேனா வால்யூம் 1' திரைப்படம். மலைவாழ் மக்கள் தங்களின் சாமி சிலையை காப்பாற்ற போராடும் கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'படையப்பா'. இப்படம் இன்று 12ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படுகிறது.
விஜயசுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாண்புமிகு பறை'. இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
ஹனி ரோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'Rachel'. இந்த மலையாள திரைப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
சந்தீப் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Mowgli'. பழங்குடிய இளைஞன் தன் காதலியை காப்பாற்ற போராடும் கதை. இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸானது.
அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'லாக்டவுன்'. இப்படம் இன்று 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் திரையிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications