ஒரே நாளில் தியேட்டரில் ரிலீஸாகும் 12 படங்கள்.. என்னென்ன? சூப்பர் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? குடும்பத்துடன் என்னென்ன படம் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வித் லவ்'. இந்த ரொமான்டிக் ஃபீல் குட் படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
நடிகை தன்ஷிகா முதன்மை ரோலில் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'யோகிடா'. இந்த ஆக்ஷன் திரைப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஜெயராம், நகுல், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல் கதை சொல்லவா'. இப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
பாவனா நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Anomie'. ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் 'Ashakal Aayiram'. இந்த ஃபீல் குட் திரைப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சாரா அர்ஜுன், பூமிகா, கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படம் 'Euphoria'. க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஆர் வி உதயகுமார், லெனின், அணு மோகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ரெட் லேபிள்'. திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் கே என் பத்மராஜா இயக்கத்தில் திவ்யா தாமஸ் முதன்மை ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'கில்லி மாப்பிள்ளை'. இப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், ரொமான்ஸ், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கரிகாடன்'. இப்படம் இன்று 6ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications