இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.. என்னென்ன? இந்த வீக் எண்டு என்ன பார்க்கலாம்?
இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டார்லிங் கிருஷ்ணா இயக்கி நடித்த ரொமான்டிக் கன்னட திரைப்படம் 'Love Mocktail 3'. யதுநந்தன், மிலானா உள்ளிட்டோர் நடிப்பில் நகுல் அபியங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படம் இன்று19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'Aadu 3'. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் ஜெயசூர்யா, விஜய் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ustaad Bhagat Singh'. ஆக்ஷன், காமெடி கதைக்களத்தில் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
கென் கருணாஸ் இயக்கி, நடித்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'யூத்'. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம், இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications