இந்த வார தியேட்டர் ரிலீஸ்.. வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் திரைப்படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு எந்த படம் பார்க்கலாம்? வாங்க பார்ப்போம்.
இளவரசு, சரவணன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் திரைப்படம் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட க்ரைம் திரைப்படமாகும். இப்படம் இன்று 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
காமெடி, ஃபேண்டஸி, ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'கரக்கம்'. இளைஞர்கள் செய்த பிராங்க் விபரீதமாக மாறிய கதை. இந்த த்ரில் படம் இன்று 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Dr Bennat'. இப்படம் நாளை 29ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.
சிபி சந்திரன், ரோபோ சங்கர், கீர்த்தனா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஈகோ ராமன்'. இப்படம் நாளை 29ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.
அட்வென்ச்சர், காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் 'Return of the Jungle'. இப்படம் நாளை 29ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.
ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு, சிங்கம் புலி, மிஷ்கின் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பரிமளா அண்ட் கோ'. இப்படம் இன்று 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'பிளாஸ்ட்'. இப்படம் இன்று 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
துஷாரா விஜயன் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன், க்ரைம் திரைப்படம் 'காட்டாளன்'. இப்படம் இன்று 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர், ரொமான்டிக் திரைப்படம் 'Obsession'. இப்படம் இன்று 28ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications