துடரும் ஓடிடி ரிலீஸ்.. அமைதியான குடும்பத்தை சீண்டிப்பார்த்த சூழ்ச்சிகள்.. கொதித்தெழுந்த மோகன்லால்.. எதில் பார்க்கலாம்?
மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
படக்குழு: தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, பிரகாஷ் வர்மா, பாரதிராஜா, பினு பப்பு, பர்கான் பாசில், தாமஸ் மேத்யூ, இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் 'துடரும்'. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.
மாஸ் காட்டும் மோகன்லால்: மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான 'எம்பூரான்' திரைப்படம் மெகா ஹிட்டானது. படம் ரிலீஸாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தாலும் விமர்சனம் ரீதியாகவும், வசூலிலும் மெகா ஹிட் கொடுத்துள்ளார், மோகன்லால். பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து 'துடரும்' படத்தை கொடுத்து மீண்டும் வெற்றி கண்டுள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
துடரும்: கார் ஓட்டுநராக மோகன்லால் நடித்திருப்பார். அவரின் மனைவியாக ஷோபனா மற்றும் இரண்டு பிள்ளைகள். மகிழ்ச்சியான இந்த சின்ன குடும்பத்தில் பிரச்சனை தொடங்குகிறது. ஷோபனா மற்றும் பிள்ளைகள் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் மோகன்லால் வைத்திருந்த காரில் கஞ்சா இருப்பதாக அவரை போலீஸ் கைது செய்கின்றனர். அதே நேரத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வருகிறது. மோகன்லாலின் மகனையும் ஆளை காணோம். என்ன ஆனது தெரியவில்லை.
தொடரும்.. இந்த பதட்டத்திற்கு மத்தியில் போலீசிடம் கெஞ்சி கூத்தாடி காரை மீட்கும் மோகன்லாலுக்கு மற்றொரு பிரச்சனை. எங்களுக்கு சின்ன உதவி செய் நாங்கள் காரை தருகிறோம் என போலீஸ் கேட்க சம்மதிக்கிறார், மோகன்லால். போலீஸுடன் அந்த கார் ஒரு காட்டுப்பாதைக்குள் செல்ல, காரில் இருந்து ஒரு பிணத்தை கட்டுக்குள் போலீசார் வீச செம சாக்கில் மோகன்லால்.
தொடரும் பிரச்சனை: போலீசிடம் மாட்டிக்கொண்ட கார், காணாமல் போன மகன், காட்டுக்குள் வீசப்பட்ட பிணம் என தொடர் சிக்கல்களில் இருந்து மோகன்லால் எப்படி மீண்டு வருகிறார். பிணத்திற்கு பின்னால் உள்ள சஸ்பென்ஸ்? மகனை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. மோகன்லால் ஷோபனாவின் ஜோடி பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது. வில்லன் கதாபத்திரத்தில் பிரகாஷ் வர்மா மெர்சல் செய்திருப்பார்.
பட்ஜெட், வசூல்: மோகன்லால் நடிப்பில் வெளியான இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 90 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதில், மோஹன்லாலில் சம்பளம் 20 கோடி ரூபாய் ஆகும். தியேட்டரில் ரிலீசான இப்படம் முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்றது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் மொத்தம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது.
ஓடிடி ரிலீஸ்? கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டரில் ரிலீஸாகி பட்டையைக்கிளப்பிய இப்படம் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிகம் ஈர்த்து. இந்த நிலையில் இப்படம் நாளை 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வீக் எண்டு துடரும் படம் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications