2026 இதுவரை.. கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை வாரிசுருட்டிய தமிழ் படங்கள்.. என்னென்ன? எந்த ஓடிடியில் ரிலீசானது?
2026ம் ஆண்டு தொடங்கி 4 மாதங்களே ஆன நிலையில் ஏகப்பட்ட தமிழ் படங்கள் ரிலீசாகி சினிமா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இருப்பினும் ஜனநாயகன் ரிலீசாகாதது பெரும் ஏமாற்றமே. அந்த வகையில் கம்மி பட்ஜெட்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை வாரிசுருட்டிய தமிழ் படங்களின் பட்டியலில் ஜிவி பிரகாஷின் 'ஹேப்பி ராஜ்' திரைப்படம் உள்ளது. 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ஹிட்டானது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை வாரிசுருட்டிய தமிழ் படங்களின் பட்டியலில் ஜீவா நடிப்பில் வெளிவந்த 'தம்பி தலைவர் தலைமையில்' திரைப்படம் இடம் பிடித்துள்ளது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
2026ம் ஆண்டின் சூப்பர் ஹிட் ஃபீல் குட் திரைப்படம் 'வித் லவ்'. வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 40 கோடி ரூபாய்க்கும் திகமாக வசூல் செய்து சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
கென் கருணாஸ் இயக்கி, நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'யூத்'. 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த மார்ச் மாதம் தியேட்டரில் ரிலீசான இப்படம், உலகளவில் 70 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட்டானது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் லோ பட்ஜெட் திரைப்படம் 'தாய் கிழவி'. ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த இந்த காமெடி, ஃபீல் குட் திரைப்படம் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் 84 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து மெகா ஹிட்டானது. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications