எதிர்பார்ப்புடன் வெளிவந்த TN 2026.. 3 நாள் கலெக்ஷன் என்ன?
நட்டி நட்ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த TN 2026 திரைப்படம் கடந்த 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என பார்ப்போம்.
TN 2026 படக்குழு: நடிகர் தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடராஜன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'TN 2026'. சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், சிருத்தா ராவ், எம் எஸ் பாஸ்கர் உட்பட நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கண்ணன் ரவி குழுமம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கதை: வட மாநில இளைஞரான நட்ராஜ், தமிழ்நாட்டிற்கு வந்து குல்கந்த் குமார் என்ற நடிகரை மாறிவிடுகிறார். தனி ஒரு ஆளாக தமிழ்நாட்டில் கஷ்டப்படும் நட்ராஜுக்கு, ஜமீன்தார் தம்பி ராமையா உதவி செய்கிறார்.
ராமையா உதவியாலும், திறமையினாலும் மக்கள் மனம் வென்ற ஸ்டார் நடிகராக நடராஜன் மாறிவிடுகிறார். இவருக்கென கோடானகோடி ரசிகர்கள் கூட்டம், ரசிகர் மன்றங்கள் உருவாகின்றன. சினிமா பயணத்தில் இருந்து அரசியலுக்குள் என்ட்ரி கொடுக்கும் நட்ராஜுக்கு ராமையா உதவி செய்கிறார்.
அரசியல் கட்சி தொடக்கி தமிழ்நாட்டின் முதல்வராக ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். பல அழுத்தங்களை கடந்து முதல்வரானாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
படம் ரிலீசுக்கு முன்னரே பல விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் விஜய்யின் அரசியல் தொடக்கத்தை சீண்டுவது போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் படம் தியேட்டரில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
வசூல்: கடந்த 10ம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்படம், 3 நாட்களில் 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications