மேஷம்: சந்திரன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீட்டிற்குச் செல்கிறார். கடந்த இரண்டு நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு ஏற்படும் நாள்
மேஷம்: சந்திரன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீட்டிற்குச் செல்கிறார். கடந்த இரண்டு...
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு...
மிதுனம்: ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வேலையில் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உதவிகள் தேடி வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
மிதுனம்: ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வேலையில் அலைச்சலும், சிறுசிறு...
கடகம்: சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை முடிவுக்கு வரும். வியாபார ரீதியாக சில முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். புகழும் கௌரவமும் கூடும் நாள்.
கடகம்: சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்....
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சகோதரர்களின் உதவி தேடி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும் நாளாகும்.
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். திட்டமிட்ட காரியங்கள்...
கன்னி: சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் அமைதி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி: சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார்....