bredcrumb

Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru
| Published: Sunday, September 5, 2021, 09:21 [IST]
இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 05, 2021
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்குள் நுழைகிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வரவும் திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று செய்யும் செயல்களில் மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். பொது இடத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் நுழைகிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிந்தித்து செய்வதே சிறந்தது. குடும்பத்தில் எதிர்பாராத விரயங்களால் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் நுழைகிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபம் அதிகரிக்கும்.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செய்யும் தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வீட்டிற்கு உறவினர்கள் தேடி வருவார்கள்.
 Rasi Palan: தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். மாலை வரை நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். மாலைக்கு மேல் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X