bredcrumb

Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru
| Published: Tuesday, August 31, 2021, 09:36 [IST]
இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஆகஸ்ட்31, 2021
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார்.உச்சம் பெற்ற சந்திரனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.இன்று உங்களுக்கு உடல்நிலையில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும் தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வேலையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பணம் செலவு விசயத்தில் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆலய வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தொழில் வியாபார ரீதியான பயணத்தால் நன்மைகள் ஏற்படுத்.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திடீர் பண வரவு வரும்.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சொத்து சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
Rasi Palan: துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் அதிகரிக்கும் செலவுகள் குறையும்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X