மேஷம்: ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பணம் பல திசைகளில் இருந்தும் வரும். வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு சந்திர யோகம் கூடி வந்துள்ளதால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மேஷம்: ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் இணைந்து சஞ்சாரம்...
ரிஷபம்: ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் குரு உடன் இணைந்து அமர்ந்துள்ளதால் அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
ரிஷபம்: ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் குரு உடன் இணைந்து அமர்ந்துள்ளதால் அரசு வேலை...
மிதுனம்: ராசிக்கு 9வது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம்.
மிதுனம்: ராசிக்கு 9வது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளதால்...
கடகம்: ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளார். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சிலும் வேலையிலும் கவனம் தேவை. வீண் விதண்டாவாதத்தை குறைத்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும். இன்று வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவும் அதிகரிக்கும்.
கடகம்: ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளார். இன்று சந்திராஷ்டமம்...
சிம்மம்: உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் குருவுடன் அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குரு சந்திரன் பார்வை உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன் செவ்வாய் மீது விழுவதால் முகத்தில் தெளிவு பிறக்கும். சுப காரியம் தொடர்பாக பேசலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் குருவுடன் அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே...
கன்னி: உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் குருபகவானுடன் மறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சின்னச் சின்ன நோய் பாதிப்புகள் ஏற்படும். இன்றைய தினம் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பேச்சு திறமை அதிகரிக்கும். பயணங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
கன்னி: உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் குருபகவானுடன் மறைந்துள்ளதால் உடல்...