bredcrumb

Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru
| Published: Thursday, July 29, 2021, 09:01 [IST]
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்:

மனதில் உற்சாகம் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் அலட்சியம் வேண்டாம் கவனம் தேவை. இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு வெற்றி கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்:

சந்திரன் இன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும்.இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நன்மைகளும் லாபங்களும் நிறைந்த நாளாக அமைந்துள்ளது.
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் உதவியும் தேடி வரும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும்.

Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். கண்டச்சனி காலம் என்பதால் சின்னச் சின்ன கவலைகள் வரும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்:

சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி:

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும்.
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
7/12
துலாம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுறுசுறுப்பாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் ஏற்படும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
8/12
விருச்சிகம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் திடீர் செலவுகள் வரும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.  நண்பர்களின் உதவியால் கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும்.

Rasi Palan: சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
9/12
தனுசு:

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கலாம் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X